அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம்: டிஜிபி சைலேந்திர பாபு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  09:04:00 IST

கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் நவல்பட்டு சோழமாநகரில் உள்ள இல்லத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று, பூமிநாதன் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
 
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, “பூமிநாதனின் இழப்பு பெரிய இழப்பாக இருக்கிறது. தீவிரவாத தடுப்பு பிரிவில் சிறந்த கமெண்ட் பயிற்சி எடுத்து முதல்வரிடம் பதக்கம் பெற்றவர். வீரத்தோடும் விவேகத்தோடும்தான் பணிபுரிந்துள்ளார்.
 
15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று ஆடு திருடர்களை பிடித்து ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளார். ஆடு திருடர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் பூமிநாதன் இறந்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஒரு கோடி நிவாரண தொகையும் பணி வழங்குவதாகவும் அறிவித்தார்.
 
1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார்.
 
ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளோம். சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது. 52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குற்றவாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார். இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர்தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
இந்த கொலை குற்றத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் புலன் விசாரணை முழுமையாக விசாரித்து விட்டேன், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை இவர்கள்தான் கொலை செய்துள்ளனர் எனவும், 100% ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...