கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரி மலைக்கு வருவதைப் பக்தர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுதொடர்பாக தேவசம் போர்டின் தலைவர் என். வாசு, 'பக்தர்கள் அனைவரும் சபரி மலைக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அனைத்து கோயில்களும் விழாக்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.