???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தடுப்பு முகாமா அல்லது சிறைச்சாலையா?

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   25 , 2019  04:38:00 IST


Andhimazhai Image
சட்டவிரோதமாக குடியேறியதாக கருதப்படும் இசுலாமியர்களை தடுப்பு முகாம்களில் அடைக்கப்போவதாக சொல்லப்படுவது வதந்தி. இவ்வாறு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை தொடர்ந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களின் புகைப்படத்தை பதிவிட்டு பலரும் பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளனர்.
 
தடுப்பு முகாமானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களாக கருதப்படுவர்களுக்காக கட்டப்படுவதாகும். வெளிநாட்டினர் சட்டம் 1946-ன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் தடுப்பு மையங்களை உருவாக்குகின்றன. 
 
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, பூர்வீக இந்தியர்களை அடையாளப்படுத்துவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதிவின்படி ஏறக்குறைய 19 லட்சத்துக்கும் அதிகமானோரது பெயர்கள் விடுபட்டிருந்தன. மேலும் அவர்களது குடியுரிமையை நீதிமன்றம் சென்று நிரூபிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் வாய்ப்பளிக்கபடுமென சொல்லப்பட்டது.
 
ஆனால், மறுபுறம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரிவுப்படுத்துவதற்கான சமிக்ஞைகள் என சூழல் மாறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவரும் தடுப்பு முகாம்களும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
 
கடந்த 2005-இல் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் அசாமில் முதல் தடுப்பு முகாமை கட்டினார். பிறகு 2018 வரை ஆங்காங்கே முகாம்கள் உருவாகி வந்திருக்கின்றன. இப்போதைய நிலைமைக்கு கோல்பரா, தேஸ்பூர், ஜோர்ஹாட், டிப்ருகார், சில்ச்சார் மற்றும் கோக்ரஜார் என அசாமின் ஆறு இடங்களில் தடுப்பு முகாம்கள் உள்ளன. இதில் சில முகாம்கள் சிறைச்சாலைக்கு உட்பட்ட இடத்தில் உள்ளன.  மாட்டியாவில் சுமார் 3,000 பேர் தங்கும் அளவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு முகாம் கட்டப்படுகிறது.
 
 
இதேபோல் கர்நாடகாவில் ஒரு முகாம் உள்ளது. மும்பை, மேற்கு வங்கத்தின் இரண்டு இடங்களில் தடுப்பு முகாம்கள் உருவாக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. டெல்லி, கோவா ஆகிய இடங்களிலும் தடுப்பு முகாம் வரப்போகிறது. தடுப்பு முகாம்கள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதில், அடிப்படை நவீன வசதிகள் கொண்டிருக்க வேண்டும், திறன்மேம்பாட்டு மையங்கள் இருக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பகம் இருக்க வேண்டுமென சொல்லப்பட்டிருக்கிறது. 
 
இதில் அனைவருக்கும் எழும் முக்கிய, கேள்வி என்னவென்றால் இந்த முகாம்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுபவர்களுக்கு உரிய வசதிகளுடன்கூடிய வசிப்பிடமாக இருக்கப்போகிறதா? அல்லது தண்டனை பெற்றவர்களுக்கான சிறைச்சாலையாக இருக்கப்போகிறதா? என்பதுதான். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...