???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிரும் 18 இடைத்தேர்தல் தொகுதிகள்!

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   11 , 2019  05:09:27 IST


Andhimazhai Image

 

 

”மக்களவைத் தேர்தலா? 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலா? எது அதிமுகவுக்கு முக்கியம்? சொல்லுப் பார்ப்போம்” என்றான் தேசிங்கு. குதிரை மரத்தடியில் மேய்ந்து கொண்டிருந்த நிலையில், “ நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியுது..’’ என்றது.

 

“என்ன சொல்றேன்..”

 

“இந்த பதினெட்டில் பத்தாவது வெல்ல வில்லை என்றால் எடப்பாடியாரின் ஆட்சிக்கு ஆபத்து வந்துடும்.. சரியா?”

 

“அதே…   மொத்த இடங்களின் எண்ணிக்கை 234. அதில் 21 இடம் இப்போ காலியாக இருக்கிறது. ஆனால் பதினெட்டு இடத்துக்குத்தான் தேர்தல்.  இந்த தேர்தல் முடியும்போது மொத்தம் 231 சம உக்கள் இருப்பர்.. அதில் 116 இருந்தால்தான் அறுதிப் பெரும்பான்மை.” என்ற தேசிங்கு, “இப்போது எடப்பாடியிடம் இருப்பது அதிகாரபூர்வமாக 114 சம உக்கள். இதில் தனியரசு, கருணாஸ், தமீம் அன்சாரி ஆகிய மூவர் அணி, தினகரனை ஆதரிக்கும் இன்னும் மூணு எம்.எல்.ஏ, ஆகியோரைக் கழித்துவரும் எண்ணிக்கை 108 தான் ” என்றான்.

 

“ நூத்தியெட்டா? செம நம்பர்!  சரி….திமுக?”

 

“திமுக காங்கிரஸ் கூட்டணி இப்போது 97 சமஉக்களுடன் உள்ளது. 18 இடத்திலும் ஜெயித்தால்கூட அவங்களுக்கு 115 ஆக எண்ணிக்கை உயரும். இதை வைத்து ஆட்சியைப் பிடிக்கணும்னா அதிமுகவில் பிளவு ஏற்படுத்தணும்.. வெளியிலேர்ந்து ஆதரவு வாங்கணும்.. இதெல்லாம் நடக்கிறதுக்கு சாத்தியங்கள் குறைவு..”

 

”ஓ… இதை திமுக விரும்புமா?”

 

“தெர்ல…ஆனால் இந்த 18-ல் 16 இடங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்தான் அமமக சார்பாகத் திரும்பப் போட்டியிடுவாங்க.. அவங்க கணிசமான பேர் ஜெயித்தால் அதிமுக தரப்புக்கு முதலுக்கே மோசமாயிடும்… இந்த நிலைமை முதல்வரின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு பெரும் சவாலாக அமையுனு பேசிக்கிறாங்க..”

 

“தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடருமா? அதையாவது சொல்லுங்க..”

 

“அதிமுக ஆட்சியே தொடரும். ஆனால் தலைமை மாறிவிடலாம் என்று தினகரன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்”

 

“அவங்கதான் ரொம்பநாளா இதைச் சொல்றாங்களே பாஸ்..” என்றபடி குதிரை கனைத்தது.

 

“ஆக எடப்பாடியாரை லேசாக எடைபோட்டிடாதீங்கன்னு சொல்ற.. சரிதானே?”

 

“ஆமா மன்னவா!” என்ற குதிரை.

 

“சரி.. திமுக பக்கம் என்ன நடக்குது?”

 

“அவங்க நம்பிக்கையுடன் களமிறங்கி இருக்காங்க. தேமுதிகவை கலாய்ச்சி விட்டதிலே அவங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம். சிபிஐ, சிபிஎம், மதிமுக, ஐஜேகே, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுடன் உற்சாகமாகக் களமிறங்கி தொகுதிப் பங்கீடும் முடிச்சிட்டாங்க.. அவங்க தரப்பில் மிக முக்கியமான விஷயமாகக் கருதுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சிறுபான்மை இன வாக்குகளும் தங்கள் அணிக்கே கிடைக்கப்போகிறது என்பதைத்தான்..”

 

“ஆமாம்… ஆனால் எஸ்டிபிஐ காரங்க டிடிவிக்கு ஆதரவு தெரிவிச்சிட்டாங்களே..”

 

“ஆனால் அதனால் தங்களுக்கு பெரிய இழப்பு இல்லை. டிடிவி ஓரளவு அதிமுக வாக்குகளைப் பிரிப்பார். குறைந்த பட்சம் அதிமுக போட்டியிடாத பிற தொகுதிகளிலாவது தினகரனால் பிரியும் வாக்கு எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால் தங்களுக்குத்தான் சாதகம் என்று கணக்குப் போடுகிறார்கள் திமுகவினர்..”

 

“இந்த வாட்டி திமுகவிலும் அதிமுகவிலும் வாரிசுகள் வருகை அதிகமாக இருக்கும் என்று சொல்றாங்களே?”

 

“நெசந்தான்.. அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்”: என்ற தேசிங்கு கையில் அதிர்ந்த செல்போனை காதில் வைத்தான்.

 


English Summary
elections in TN

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...