???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார் 0 பண்ருட்டி ராமச்சந்திரன்,செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு புதிய பதவி! 0 சேதுமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றமுடியாது: மத்திய அரசு 0 டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்! 0 சந்திரபாபு நாயுடு செய்ததை போல தமிழக முதல்வரால் செய்ய முடியுமா?: அ. ராசா கேள்வி 0 20 பைரஸி இணையதளங்கள் முடக்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை 0 அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கம் 0 பெண் பத்திரிக்கையாளர் அவமதிப்பு: மன்னிப்பு கேட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 சென்ற ஆண்டின் நகலாக இந்த ஆண்டு பட்ஜெட்: கமல் கருத்து 0 மா.அரங்கநாதன் இலக்கிய விருது! 0 தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல் 0 குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு 0 பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா! 0 ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு வருவாய் அதிகரிப்பு: நிதி நிலை அறிக்கை 0 சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது - மத்திய அரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெங்கு காய்ச்சல்: ஆறு மாதக் குழந்தையுடன் தாய் தற்கொலை

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   03 , 2017  06:05:37 IST


Andhimazhai Image
 
அன்புக்கொடி தூங்கவில்லை அல்லது தூக்கம் வரவில்லை. எதேதோ சொல்லிப் புலம்பினார். பெரியசாமியால் தன் மனைவியைத் தேற்ற முடியவில்லை. ஆறுதல் வார்த்தைகள் கையறு நிலையில் பயனற்றுப் போய்விடும் போல. தெய்வங்கள் துணைக்கு வராத கணமொன்றில்தான் அன்புக்கொடி அந்த முடிவை  எடுத்திருக்க வேண்டும். அந்த முடிவைச் செயல்படுத்த அவர் கணவர் உறங்கும் வரை காத்திருந்தார். பெரியசாமி அதிகாலை நான்கு மணிக்கு ஆழ்ந்து உறங்கிப்போனார். கண்விழித்தவர் தன் மனைவியையும் குழந்தையும் காணாது தேடத்துவங்கினார். அவர்கள் இருவரும் அருகிலுள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்கள்.  திருமணமாகிப் பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த தன் ஆண் குழந்தையுடன் அந்த ஏழைத்தாய் அன்புக்கொடி  தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம்?
 
 
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. முடி திருத்துநர் இவரது தொழில். சொற்ப வருமானம். மனைவி அன்புக்கொடி, வயது 32. இவர்களது மகன் சர்வன் ஆறு மாதக் குழந்தை.   கடந்த ஞாயிறு அன்று குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. கடுமையான காய்ச்சல். அன்புக்கொடியும் பெரியசாமியும் சேலத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றார்கள். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். மருத்துவம் செய்ய தினமும் நான்காயிரம் ரூபாய் வரை செலவாகும் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவ்வளவு பணம் செலவு செய்ய இயலாத அன்புக்கொடியும், பெரியசாமியும்  திங்கள் இரவு 11 மணிக்கு  மனம் கனத்து வீடு திரும்பினார்கள். அன்புக்கொடிக்கு மன உளைச்சல். மகனுக்கு மருத்துவம் பார்க்குமளவுக்கு கையில் பணம் இல்லாததே மன உளைச்சலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல் என்பது வள்ளுவர் வாக்கு. மனம் வெறுத்து மகனுடன் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிச்சியில் ஆழ்த்துகிறது. இனி அவர் ஒரு செய்தி மட்டுமே. 
 
 
இதனிடையே சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இன்று டெங்கு விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும் வாகனங்களில் சென்னை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக மிகத் தீவிரமாக டெங்குவை ஒழிக்கப் போராடித்தான் வருகிறார்கள். அரசின் கணக்கீட்டுப்படி தமிழகத்தில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். எனினும் இன்று தன் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட அன்புக்கொடி எத்தனையாவது உயிரிழப்பு என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாதுதான்.    


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...