![]() |
மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!Posted : வெள்ளிக்கிழமை, மே 27 , 2022 15:01:39 IST
மசூதிகள் கட்டுவதற்காக 36,000 இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டிருப்பதாகவும், அதை இந்துக்கள் சட்டப்பூர்வமாக மீட்பார்கள் எனவும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கே.எஸ். ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதில் வல்லவர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, “ ஒருநாள் இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக்கொடி இருக்கும். செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும்” என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், மீண்டும் ஓர் கருத்தைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 36,000 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை இந்துக்கள் சட்டப்பூர்வமாக மீட்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
|
|