அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2022  09:20:00 IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெறிக்க கூடியதாக ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. 12ம் தேதி வரை கூட்ட தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள்.
 
பா.ஜ.க. அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையில் எதிச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக  திரும்ப பெற்றனர்.  மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இருந்தது. எதிர்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றி கொண்டனர்’ என விமர்சித்தார்.
 
பிகார் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பிகாரில் பா.ஜ.க.விற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு ஆச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்து உள்ள முடிவு வரலாற்று சிறப்பாக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது.இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக அமைய வேண்டும்’ என தெரிவித்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...