???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பதினோரு பேரை தூக்கில் தொங்க வைத்த அப்பாவின் ஆத்மா! அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   05 , 2018  05:56:18 IST


Andhimazhai Image

இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. டெல்லியில் ஒரே வீட்டில் பதினோரு பேர் இறந்து கிடந்த சம்பவம் பற்றி நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியுற வைக்கின்றன. ஆரம்பத்தில் குடும்பமே தற்கொலை செய்துகொண்டிருக்கவேண்டும் என்றுயூகமாகச் சொன்ன டெல்லி காவல்துறை சிசிடிவி காட்சிகள் மூலம் இது தற்கொலைதான் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது.

வீட்டின் நடுவே கூரையிலிருந்த கம்பி வலையில் பத்துபேர் நெருக்கமாக தூக்கில் தொங்க பக்கத்து அறையில் குடும்பத்தின் முதிய உறுப்பினரான பெண்மணி இறந்து கிடந்தார். கடந்த ஞாயிறன்று காலையில் இவர்கள் நடத்திவரும் மளிகைக்கடை திறக்கவில்லையே என்று விசாரிக்க வீட்டில் நுழைந்த பக்கத்துவீட்டுக்காரர் தான் இந்த கோரக்காட்சியை முதலில் பார்த்தவர். போலீஸுக்கு தகவல் சொல்லி, வரிசை வரிசையாக ஆம்புலன்ஸ்கள் வந்து இறந்து போன பதினோரு உடல்களையும் எடுத்துச் செல்ல, டெல்லியின் அப்பகுதியே மிரண்டு போனது.

என்னத்துக்கு பதினோரு பேர் கொண்ட ஒரு சந்தோஷமான குடும்பமே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ளவேண்டும்?

 

அந்த வீட்டில் கிடைத்த டைரிக் குறிப்புகளில் இருந்து காவல்துறையினர் முடிச்சுகளை அவிழ்த்தனர். ஆலமரத்தின் கிளையில் இருந்து தொங்குவது போல் தொங்கவேண்டும்’ ‘ ஒருவர் கையை ஒருவர் அவிழ்க்க உதவவேண்டும்’’ போன்ற குறிப்புகள் அதில் இருந்தன.

 

இந்த குடும்பம் ஒரு தாந்திரீக முறையைக் கடைபிடிக்கத் திட்டம் போட்டுள்ளது. அவர்களின் துன்பத்தைப் போக்கும் முறை அது. அதில் யாரும் செத்துப்போய்விடுவோம் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. இது முடிந்ததும் மீண்டும் உயிர் பிழைத்துவிடுவோம் என்றுதான் அவர்கள் நினைத்துள்ளனர்.

பக்கத்துவீட்டு சிசிசிடிவி காமிராகாட்சிகள் அன்றிரவு பத்து மணிக்கு வெளியே இருந்து ஸ்டூல்களை அவர்கள் கொண்டுவருவதையும் வயர்களை எடுத்துக்கொண்டு வருவதையும் காண்பிக்கின்றன. அந்த ஸ்டூல்களும் வயர்களுமே தற்கொலைக்குப் பயன்பட்டிருக்கின்றன.

 

77 வயதான நாராயண் தேவி,  அவரது இருமகன்கள் பவ்னேஷ்(50), லலித் (45), இவர்களின் மனைவிகள் சவிதா (48), டினா(42) ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர். நாராயண் தேவியின் ஒரு மகள் பிரதீபா(57), ஐந்து பேரக்குழந்தைகள் பிரியங்கா(33), நீத்து(25), மோனு(23) துருவ்(15)-  சிவம்(15) ஆகியோர் மீதிப்பேர். இதில் ப்ரியங்காவுக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது.

என்ன மாதிரியான சடங்கை அவர்கள் நிகழ்த்த விரும்பினார்கள?

2007-ல் நாரயணி தேவியின் கணவர் கோபால் தாஸ் இறந்துவிட்டார்,. அவரது மரணம் குடும்பத்தைப் பாதித்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவரது மூன்றாவது மகன் லலித் உடலில் அப்பாவின் ஆத்மா குடிபுகுந்தததாகச் சொல்லப்பட்டது. மற்ற பிள்ளைகள் லலித்தை அப்பா என்றே அழைக்க ஆரம்பித்தனராம். அதிலிருந்து அப்பாவின் ஆத்மாவின் வழிகாட்டலில் இவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

மறுபிறவி எடுத்த அப்பாவின் வழிகாட்டலில் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்தனவாம்.  இந்நிலையில் பிரியங்காவுக்கு நிச்சயதர்த்தம் ஆனது. அது முடிந்ததும் விருந்தினர்கள் போனதும் ஏழு நாட்கள் ரகசியமாக நன்று கூறும் சடங்கு நடத்த லலித் விரும்பினார். அதாவது அப்பாவின் ஆத்மாவை சந்தித்து எல்லோரும் நன்று கூறுதல். ஏழாம் நாள் தூக்கில் தொங்கி அவரைச் சந்தித்துவிட்டு மீண்டுவிடுதல். மீளமாட்டோம் என்று யாரும் நினைக்கவில்லை. இந்த விஷயங்களை டைரிக்குறிப்புகளில் இருந்து கண்டுபிடித்திருப்பதாக போலீஸ் கூறுகிறது.

 

கடைசியில் இந்த பைத்தியக்காரத்தனம் குடும்பத்துடன் தற்கொலையாக முடிந்துவிட்டது!

 

இந்த மனநிலையை மனோத்ததுவ நிபுணர்கள் தங்கள் மொழியில் விளக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். முக்தி அடையலாம் என்று கும்பலாக மக்களைக் கூட்டிச் சென்று தற்கொலை செய்துகொண்ட சாமியார்களைப் பற்றி படித்திருக்கிறோம். ஆனால் மீண்டுவிடுவோம் என்ற நம்பிககையில் தந்தை/ தாத்தாவின் ஆத்மாவை சந்திக்க தூக்கில் தொங்கிய குடும்பம் பரிதாபப்படவும் வருத்தப்படவும் வைக்கிறது!click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...