அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   05 , 2022  08:03:02 IST

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
 
சமீபத்தில் இவர் இயக்கிய மாடத்தி என்ற திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதில், ’காளி’ போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் LGBT கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் ட்விட்டரில் வெளியான சில நிமிடங்களிலேயே எதிர் வினைகளைப் பெற துவங்கியது.
 
இந்து மதத்தை அவமதிக்கும் லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது. குறிப்பாக பாஜக-வினர் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் தற்போது ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...