செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று காலை குவிந்ததால்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Posted : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19 , 2023 12:45:05 IST
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று காலை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறிய கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
ஜனவரி மாத இறுதியில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நிறைவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில் பெண்களுக்கு இன்னும் உரிய பாதுகாப்பு இல்லை, தனது நடைபயணத்தின் போது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான பல பெண்களை சந்தித்தாக கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு ராகுல் பதில் அளிக்காத நிலையில், தற்போது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக டெல்லி காவல் சட்ட ஒழுங்கு சிறப்பு ஆணையர் பீர் ஹூடா கூறுகையில், "மார்ச் 15ஆம் தேதி அன்றே ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களை அவர் சந்திக்கவில்லை. அடுத்த நாளும் முயற்சி செய்தோம். பின்னர் நோட்டீசும் அனுப்பினோம். ஆனால் பதில் தராததால் நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
|