???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  20:03:09 IST

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர். இருதரப்பினரையும் போலீசார் அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் இருந்த பல வாகனங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கு சிலர் தீவைத்தனர்.

இறுதியாக கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதில் கூட்டத்தினர் நாலாபுறமும் கலைந்து ஓடினர். இந்த மோதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன.

வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பல போலீசாரும் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே டெல்லி ஆளுநர் அனில் பைஜால், வடகிழக்கு டெல்லியில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...