???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியில் அமலுக்கு வந்தது வாகன கட்டுப்பாடு திட்டம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  21:53:32 IST

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் விவசாயக் கழிவுகளை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

புகை மூட்டம் காரணமாக 150 விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், 40 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, அமிர்தசர் ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 15 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.  காற்று மாசுக்கு 40 விழுக்காடு விவசாயக் கழிவுகளை எரிப்பதே காரணம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறி வரும் நிலையில், பஞ்சாபில் வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை எரித்ததாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவில் காற்று மாசு ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்களிடம் இருந்து 6 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசை குறைப்பதற்காக இன்று முதல் பழைய வாகனக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட கிழமைகளிலும், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் மற்ற நாட்களிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...