???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜே.என்.யூவில் தீபிகா படுகோன்! பப்ளிசிட்டிக்காகவா?

Posted : புதன்கிழமை,   ஜனவரி   08 , 2020  00:16:57 IST


Andhimazhai Image

நடிகை தீபிகா படுகோன் ஜேஎன்யூ மாணவர்களை நேற்று சென்று சந்தித்தது பெரும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம் வலதுசாரிகள் தரப்பில் இருந்து, ‘தீபிகா விரைவில் வெளியாக இருக்கும் தன் சப்பக் படத்துக்கு பப்ளிசிட்டி தேட அங்கு சென்றுள்ளார்,’ என விமர்சனமும் எழுந்தது. ஒரு தொலைக்காட்சி இப்படிச் செய்தியையும் முன்வைத்தது..

 

ஆனால் சினிமா என்பது வியாபாரம். இது போன்ற சர்ச்சைகளில் நடிகர்கள் அதுவும் குறிப்பாக நடிகைகள் மாட்டிக்கொள்வது பெரும் சர்ச்சையையும் வணிகப் பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆனாலும் இதையும் மீறி தீபிகா படுகோன் ஜேஎன்யூ மாணவர்களைச் சந்தித்தது ஆச்சரியத்தையும் அவரது உளத்துணிச்சலையும் காட்டுவதாகவே சொல்லப்படுகிறது.

 

பத்திரிக்கையாளர் ராணா அய்யூப்“ முக்கியமான ஒரு படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இதுபோன்ற செயலில் ஈடுபட ஒரு துணிச்சல் வேண்டும்” என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

 

இதற்கு அனுராக் காஷ்யப் “ தீபிகா படுகோன்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதை நாம் மறக்க வேண்டாம். தீபிகாவிற்கு எனது மரியாதைகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் ஜே என் யூ தாக்குதல் நடந்த இரவே அது குறித்து காணொளி வெளியிட்டதும், அக்‌ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா, “ நாட்டில் மாணவர்களை விட பசுமாட்டுக்குத்தான் பாதுகாப்பு அதிகம்,’’ எனக் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத் தகுந்தது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...