???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பேருந்துகள்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  00:15:24 IST

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.

"தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து பாதுகாப்பாக சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளைகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 575 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


* ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கடந்த ஆண்டு போல் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

இந்த அனைத்து சிறப்பு பஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக மாநகர பேருந்துகளை இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுண்ட்டர்கள் மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் செயல்படும். முன்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி தொடங்குகிறது." என அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...