???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீபாவளி மலர் - ஆனந்த விகடன்- ஒரு பார்வை

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   07 , 2015  06:51:45 IST


Andhimazhai Image

 

தீபாவளி மலர் என்றால் எழுத்தாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். பக்க அளவு பற்றிக்கவலை கொள்ள வேண்டாம். எங்கு கை நிற்கிறதோ அங்கே நிறுத்திக்கொள்ளலாம். பக்க அளவுக்காக சுவாரசியத்தை தியாகம் செய்யவேண்டியது இல்லை. ஆசிரியர் குழுவில் இருப்பவர்களுக்கும் அடடா அருமையான கதையாக இருக்கிறதே.. பக்கம் போதாதால் வெட்ட வேண்டி இருக்கிறதே என்று கவலைப்படவேண்டியது இல்லை. 400 பக்க அளவில் ஒரு மெகா மலராக வரும்போது இந்த கவலை வேண்டியதே இல்லை. படிக்க சுவாரசியமாக இருந்தால் போதும். தரமான கட்டுரையாக இருந்தால் போதும். ஆனந்தவிகடனின்  2015 தீபாவளி  மலர் இப்படியொரு இலக்கணங்களுடன் மிகமிக காத்திரமான தரமான இதழாக மலர்ந்திருக்கிறது. வாசித்து முடிக்கவே வாரக்கணக்கில் ஆகும் அளவுக்கு தேர்ந்த வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்றே சொல்லவேண்டும்.

சினிமா ரசிகர்களுக்காக எடுத்த எடுப்பிலேயே அஜித் குமாரின் 56 படங்களின் மூலமாக  அவரது திரை வரலாற்றை சரவெடி வெடித்திருக்கிறார்கள். நாம் பார்த்து ரசித்த அஜித் படங்கள்தான் ஆனாலும் ஒரு உற்சாக ரீவைண்ட்! இவரைக் கடந்தால் மலரில் வாங்க வாங்க என்று வரவேற்கிறார் திரையுலகின் மார்க்கண்டேயர் சிவகுமார். நீளமான ஆனால் எந்த இடத்திலும் போரடிக்காத நேர்காணல். அவரது கலையுலகப் பொன்விழா ஆண்டு இது. இந்த பகுதியின் சிறப்பு அவர் நடிக்க வந்த இந்த ஐம்பது ஆண்டுகளில் எழுதிய டைரியில் இருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு நாளில் எழுதிய குறிப்பைப் பெற்று பிரசுரம் செய்திருக்கிறார்கள். ராணுவ ஒழுங்கோடுவாழும் சிவகுமாரின் வாழ்க்கை அதில் விரிகிறது. நான் சறுக்கவும் இல்லை;சாதிக்கவும் இல்லை என்கிறபோது அந்த கலைஞனின் வாழ்க்கைப் பார்வை புரிந்துவிடுகிறது!

எழுத்தாளர்கள் சுபா எழுதியிருக்கும் பயண அனுபவக் கட்டுரை செம. எவ்வளவு சுவாரசியமான சம்பவங்கள். பூரான் கடி வாங்கி பாலா துடிக்கும் சம்பவம் பதற்றம் என்றால் பிரயாகையில்  நட்டாற்றில் அம்போ வென படகுக்காரன் போய்விட, இடுப்பளவு தண்ணீரில் அருகே வந்தவர் சித்தரோ என்று எழுதி  இருப்பது குறும்போ குறும்பு!

இறையருள் ஓவியர் சில்பியின் ஓவியங்களை வெளியிட்டு கிளாசிக்  உணர்வையும் தந்திருக்கிறார்கள். சில்பியை இரவில் கருவறைக்குள் விட்டுவிட்டு பூட்டிவிட்டுப் போய்விடுவார்களாம். அவர் இரவு முழுக்க மெல்லிய விளக்கொளியில் இறைவனின் திருமேனியை அருகே இருந்து பார்த்த்து வரைவாராம்! அப்படிப்பார்த்துப்பார்த்து வரைந்த ஓவியங்களைப் பார்க்கையில் சிலிர்த்துப்போகிறது!

ஓவியர் மருது, கவிதா பாரதியின் இலங்கைப்பயணக் கட்டுரை, மனுஷ்ய புத்திரனின் காதலின் 100 சம்பவங்கள் என்ற நெடுங்கவிதை, முகிலின் இந்திய ராஜாக்கள் பற்றிய சுவாரசிய( அந்த மகாராஜாவின் கட்டில் பிரமாதம்) கட்டுரை… இன்னும் அழகான சிறுகதைகள், கவிதைகள்,  சுவாரசியமான கட்டுரைகள் என்று விரிகிறது.

காலத்துக்கு ஏற்ப சிறுதானிய ரெசிப்பிக்களும் உண்டு. ஆமாம். இந்த தீபாவளி லேகியம் பற்றி எப்பவும் தீபாவளி மலர்களில் எழுதுவார்களே.. இந்த மலரில் அதைக் காணவில்லையே.. அல்லது என் கண்ணில் தான் படவில்லையா? இல்ல இப்பல்லாம் யாரும் அதை சாப்பிடறதே இல்லையா?

-செல்வமுத்து

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...