அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   04 , 2022  09:23:34 IST

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை பெய்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
 
மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தார். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 49 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 757 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை தள்ளி வைத்து உள்ளன. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...