???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் மறைவு - வைகோ இரங்கல்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  01:07:54 IST


Andhimazhai Image

வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகளின் பால் பற்றுக் கொண்டு, வேதாரண்யம் பகுதியில் திராவிட இயக்கத்தின் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.

சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துகளில் ஊறியவர்; வாழ்நாள் முழுமையும் கருப்புத் துண்டு அணிந்தார். தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று பலமுறை சிறைவாசம் ஏற்றவர். அவர் மட்டும் அல்ல, அவரது அண்ணன் தம்பிகள் என அவரது குடும்பம் முழுமையுமே திராவிட இயக்கப் பற்றாளர்கள்தான்.

வேதாரண்யத்திற்கு என்னைப் பலமுறை அழைத்துச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் மீது நான் மிகுந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்டு இருந்தேன். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், வேதாரண்யம் நகர் மன்றத்தலைவர் கும்பகோணம் கூட்டுறவு வங்கித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துப் பெருமை சேர்த்தார்.

அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் தி.மு.கழகத் தோழர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது .click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...