???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்றைய வானிலை- பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அறிவிப்பு

Posted : சனிக்கிழமை,   மே   09 , 2020  01:19:27 IST


Andhimazhai Image
ஒரு வானிலை அறிக்கையில் அரசியல் செய்யமுடியுமா? முடியும் என்கிறார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல். இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத், மிர்பூர், அதன் வடக்குப் பகுதியில் உள்ள கில்கித் ஆகிய நகரங்களின் வானிலை நிலவரமும் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களின் வானிலை அறிக்கையுடன் சேர்த்து தூர்தர்ஷனில் அறிவிக்கப்படும். பிற இந்திய தனியார் தொலைக்காட்சி நிலையங்களும் இதையே பின்பற்றப் போவதாக சம்மதம் தெரிவித்துள்ளன.
 
மூன்று மாதங்களுக்கு முன்பே இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஐபி, ரா தலைவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர்களும் சம்மதம் தெரிவித்தபின்னர் தூர்தர்ஷன் செய்தியின் வானிலை அறிக்கை மிர்பூர், முசாபராபாத், கில்கித் போன்ற நகரங்களையும் இந்திய நகரங்களாகவே கருதி தட்பவெப்பநிலையை வெளியிட்டு வருகிறது.
இதிலிருக்கும் முக்கிய செய்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான தயக்கமான நிலையை கைவிட்டு இந்தியா அதிரடியாக செயல்படத் தயாராகி விட்டது என்பதாகும்.
இந்திய வானிலை ஆய்வுத்துறை உலக வானிலை ஆய்வுத்துறையால் தெற்காசியாவின் பிராந்திய வானிலை அறிக்கை சொல்லும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது. எனவே  ஏற்கெனவே பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பூடான், வங்கதேசம் மாலத்தீவு, தாய்லாந்து, பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பைத் தந்துவருகிறது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நில அளவு 86000 சதுரகிமீ ஆகும்.
இந்த நடவடிக்கை மூலம் உலக நாடுகள் பலவற்றுக்கும் வலிமையான செய்தியை மறைமுகமாக அனுப்ப இந்தியா விரும்புகிறது.
 
அரசியல்சாசன சட்டப்பிரிவு 370 ஐ ஜம்முகாஷ்மிர் மாநிலத்தில் நீக்கியபிறகு, இந்தியா மேற்கொள்ளும் வெளிப்படையான  நடவடிக்கைகளில் ஒன்று இந்த வானிலை அறிக்கை.
இதன்மூலம் இந்தியா பாக்- இடையிலான உறவு வானிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது போகப்போகத் தெரியும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...