???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தர்பாரில் கலக்கிய ஷமிதா!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   09 , 2020  23:54:11 IST


Andhimazhai Image

தர்பார் திரைப்படத்தில் காவல் ஆணையர் ரஜினியின் குழுவில் இளம் பெண்  அதிகாரியாக வருவது யார் என்று பலருக்கும் கேள்வி இருக்கலாம். செம மிடுக்காக அழகாக இருக்கும் அப்பெண் ஷமிதா ஆஞ்சான். நயன்தாரா, நிவேதா தாமஸை விட இவர்தான் ரஜினிகாந்துடன் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறார். தர்பார் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

 

கர்நாடகாவில் உள்ள மங்களூர்தான் இவரது சொந்த ஊர். 2012 ஆம் ஆண்டில் மாடலிங்  துறையில் நுழைந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ஃபாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். கார்னியர், மகேந்திரா, அமுல் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

 

2014 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான “ எவரெஸ்டு” தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

 

தர்பார் படத்தில் நடித்த அனுபங்களை பற்றி அவர் கூறுகையில் “ ரஜினி சாருடன் நான் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் நாள் படபிடிப்பு முடிந்தவுடன் அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. என்னிடம் மிக தன்மையாக நடந்துகொண்டார். எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நளினி ரத்னம்  (நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர்) அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

ரஜினி ரசிகர்களின் ஆரவார வரவேற்பும் அவருக்கு உண்டு.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...