???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சும்மா கிழி!- தர்பார் விமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   09 , 2020  10:08:40 IST


Andhimazhai Image

 

 

மும்பைல பதினேழு போலீஸ்காரங்கள எரிச்சுக்கொன்ன ஒரு தாதா.. வெளிநாட்டுக்கு ஓடிர்றான். அவனை மும்பைக்கு வர வெச்சு, அவன் எந்த எடத்துல அந்த போலீஸ்காரங்களக் கொன்னானோ அதே இடத்துல அவனையும் கொல்லனும்… இதுதான் ஏ.ஆர். முருகதாஸின் தர்பார் ஒன்லைன்.

 

இதில் ரஜினி. இவரை சாதாரணமாகக் காட்டமுடியாதே… சாதாரண பதவியில் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் மும்பை கமிஷனராக டெல்லியில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தாவூத் இப்ராஹிமை நினைவூட்டும் மெகா வில்லன் பாத்திரத்தில் சுனில் ஷெட்டி. ரஜினி என்னும் அதிசாகசனுக்கு ரொம்ப நாள் கழித்து பிரம்மாண்டமான ஒரு வில்லனைக் கண்டு பிடித்து நிறுத்தியிருப்பதற்காக முருகதாஸுக்கு பாராட்டு.

 

சீருடை அணிந்தாலும் தாடியில் தோன்றவேண்டிய கட்டாயம். படம் முழுக்க மும்பையில் நிகழ்வதால் ஏகப்பட்ட இந்திப்பெயர்கள்.. ஆட்கள்… என்னப்பா படம் முழுக்க சேட்டுகளாக இருக்கிறார்கள் என்று செல்லமாகப் புலம்பிக்கொண்டார் உடனிருந்த ரசிகர்.

 

ஆனால் படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் ரஜினியே வியாபித்திருக்கிறார். எல்லா பிரேமிலும் இளமையாக துள்ளலுடன் தோன்றி கண்களைக் குளிரவைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையின் போது…(தமிழ்ப்பட ட்ரேட் மார்க் ஒத்தைக்கு ஒத்தை வாடா! என்கிற காட்சிதான்) ஸ்ப்ரிங் போல துள்ளி எழுந்து (தனுஷுக்கு சவால் விடுகிறாரோ?) பாய்வதெல்லாம் ரஜினிக்கே கொஞ்சம் ஓவர்தான்! ஆனாலும் ரசிகர்கள் கைத்தட்டி ரசிக்கிறார்கள்! ஆக்‌ஷன் காட்சிகளில் சும்மா கிழி என்று கிழிக்கிறார் தலைவர்! மாற்றுக்கருத்தே இல்லை!

 

இடைவேளை வரைக்கும் உற்சாகம். அதன்பின்னால் எமோஷன் என்று கலந்துகட்டி ஆடி இருக்கிறார். அதுவும் உங்களை கமிஷனர் பதவியிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க என்ற ஆர்டர் வந்தவுடன் தடாலனெ தவறி கீழே விழப்போய் சமாளிக்கிறாரே.. அதெல்லாம் தங்கப்பதக்கம் சிவாஜி லெவெல் சார்!

 

ஆதித்யா அருணாசலம்  செல்ல மகளின்(நிவேதா தாமஸ்) மரணத்துக்குப் பின் ’மேட் காப்’ ஆக மாறி துவம்சம் செய்யும் காட்சிகளில் துயரத்தோடு கூடிய எமோஷன் கலந்திருக்கிறது. இறந்துபோன மகள் சாவதற்கு முன் பேசிய வீடியோவைப் பார்த்தவுடன் சோர்ந்துபோயிருந்த ஆதித்யா அருணாசலம் நிமிர்ந்து நடந்துவருகிறார் பாருங்கள்… அது நிச்சயமாக பாட்ஷாவில் ரஜினி தண்ணீர்ப் பைப்பைப் பிடுங்கி ஆனந்தராஜை அடிக்கும் காட்சிக்குச் சமம்!

 

லில்லியை  ( நயன்தாரா) பார்த்ததும் பேச முடியாமல் ரஜினி திணறும்போது வெளிப்படும் வெட்கம்.. லில்லியின் உறவினர் ரஜினியின் வயதை குறிப்பிட்டு அவமானப்படுத்தும்போது எதுவும் பேசாமல் ஒரு கண்ணசைவால்  தனக்கு புரிந்துவிட்டது என வெளிப்படுத்துவது.. யோகிபாபுவுக்கு “ உன்னை அப்புறம் வச்சுக்கிறேன்” என்று அவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்களும் ரசனை. யோகிபாபு சடசடவெனப் போகும் கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உபயோகப்படுகிறார்!

 

நயன்தாரா  இந்த திரைப்படத்தில் அழகின் உச்சமாக இருக்கிறார். படத்திற்கு படம் நயன்தாரா மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுகிறார் என்றாலும் இதில் அழகோ அழகு! ரஜினியின் மகளாகவரும் நிவேதா தாமஸும் நல்லவிதத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி வலம் வருகிறார்!

 

பத்தொன்பது மாடி கட்டடத்தில் ஆயிரக்கணக்கான ஆட்களுடன் வில்லன் இருக்கிறார்! அவரை நெருங்க மும்பை போலீசில் ஆட்கள் இல்லை என்று சொன்னதும் கொரியன் படமான ரெய்ட் போல ஒன்றிரண்டு பேரை வைத்து மொத்த பில்டிங்கையும் அடியாட்களையும் துவம்சம் பண்ணுவதாகக் காட்சி வைக்கப்போகிறார் முருகதாஸ் எனத் தோன்றியது. ஆனால் இதெல்லாம் ரஜினிக்குத்தாங்காதே என்றும் இயக்குநருக்குத் தோன்றி இருக்கவேண்டும்!ரஜினி  வெளியே வரும்போது ஆயிரம் மும்பை போலீஸார் ஆபரேஷனுக்கு ரெடியாகி நிற்கிறார்கள்! மெய்சிலிர்க்கிறது!  படம் முழுக்க வெறித்தனமாக துப்பாக்கிகள் வெடிக்கின்றன! சுனில் ஷெட்டி பயங்கரமாக ஒரு கத்தியை வைத்துக் குத்தி மிரட்டுகிறார்!

 

சுத்தமான அக்மார்க் ரஜினி படம்! காலத்துக்கு ஏற்ப அனிருத் இசை! தொழில்நுட்ப உதவிகளுடன் வந்திருக்கிறது! ரசிகர்கள் ஏமாற்றம் அடையத் தேவையே இல்லை!

 

-அந்திமழை குழு

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...