அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டான்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   13 , 2022  16:18:08 IST


Andhimazhai Image

தன் லட்சியத்தை கண்டறிந்து அதில் வெற்றி பெறும் ஒருவர், தனக்கு தடைக்கல்லாக இருந்தவர்கள் உண்மையிலேயே தன் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை காலங்கழிந்து உணர்வதே ‘டான்’ திரைப்படம்.

மகன் சக்ரவர்த்தியை (சிவகார்த்திகேயன்) எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வைத்து பெரிய ஆளாகக் கொண்டு வரவேண்டும் என நினைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் மகனுக்கோ படிப்பதில் ஆர்வம் இல்லை. தனக்கு விருப்பமானது எதுவென்று கண்டறிவதற்குள் அப்பாவின் கரடுமுரடான கண்டிப்பும், கல்லூரியில் நன்னடத்தையை சொல்லிக்கொடுக்கும் பூமிநாதனின் (எஸ்.ஜே.சூர்யா) பழிவாங்கும் நடவடிக்கையும் அவருக்கு தடைக்கல்லாக வந்து நிற்கிறது. இந்த இருவரையும் எப்படி எதிர்கொண்டு தன்னுடைய இலக்கை அடைந்தார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் இடைவெளி வரைக்கும் காமெடியுடன் படம் நகர்ந்தாலும், கதை ஆமை வேகத்திலேயே நகர்கிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை விட  காமெடியே படத்திற்கு பெரும் பலம் என்றாலும், அதில் சில காமெடிகள் தமிழ் சினிமா ரசிர்களுக்கு பழக்கப்பட்டதே.

படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், சூரி, ராதாரவி, ஷிவாங்கி, பாலசரவணன், மனோபாலா, மிர்ச்சி விஜய், காளி வெங்கட், முனீஷ்காந்த் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும், சிவகார்த்திகேயனே படம் முழுக்க ஆக்கிரமிக்கிறார்.

படத்தின் தொடக்க மற்றும் இறுதிக் காட்சிகளை குறைத்திருந்தால் படம் கச்சிதமாக இருந்திருக்கும்.

அனிருத்தின் இசையில் ‘ஜலபுலஜங்கு’, ‘மார்டன் ரதியே’ பாடல்கள் துள்ளலாக இசையில் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் நடனத்திற்கு தீனிபோடும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் கல்லூரி காட்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளார். சமுத்திரக்கனி இறந்துவிட்ட பிறகு அவரின் காலைப் பிடித்து சிவகார்த்திகேயன் அழும் காட்சியை யதார்த்தமாகப் படமாகியுள்ளார்.
 

வசனம் பேச வைத்தே சிவகார்த்தியேனை  ’டான்’ ஆக்கியிருக்கிறார்  இயக்குநர். காமெடி, செண்டிமெண்ட், சண்டை, காதல் என படம் கலவையாக இருந்தாலும், அதில் எதுவும் புதிய விஷயம் இல்லை.

 
தா.பிரகாஷ்


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...