???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர் 0 என்கவுண்டர்: அரவிந்த் கெஜ்ரிவால், மேனகா காந்தி கண்டனம் 0 விஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 13 0 மகளின் ஆத்மா சாந்தி அடையும்: ஐதராபாத் மருத்துவரின் தந்தை கருத்து 0 கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்: 66% வாக்குப்பதிவு 0 ‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி 0 இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 0 அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் தகுதிகள் தளர்வு! 0 ஐதராபாத் பெண் பாலியல் வன்கொடுமை: 4 பேரும் சுட்டுக்கொலை 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபஞ்சத்தை சூழ்ந்திருக்கும் பேராபத்து

Posted : புதன்கிழமை,   மே   08 , 2019  06:57:33 IST


Andhimazhai Image
 
வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டுக்காக சூழலியல் மீது மனிதர்கள் ஏற்படுத்திய விளைவால் பூமியில் வாழும் 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஐநாவின் மிக முக்கிய அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
 
இயற்கையின் மீது, பூமியை நம்முடன் பகிர்ந்துக்கொள்ளும் ஜீவராசிகள் மீது பொருளியல் சார்ந்த வளர்ச்சியின் நோக்கில் மனிதர்கள் செலுத்திவரும் கட்டற்ற ஆதிக்கத்தின் விளைவுதான் இந்த நிலை. 
பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான கூட்டரசுகளின் அறிவியல் கொள்கைத் தளம் (IPBES) எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஐநா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த விளைவானது முழுக்க முழுக்க மனித இனத்தின் செயல்பாடுகளால் ஏற்பட்டதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
 
பொருளாதார கட்டுமானத்தை வலிமைப்படுத்தும் தொழிற்சாலைகள், அதுவிளைவிக்கும் சுற்றுச்சூழல் – நீர் மாசு, காடுகள் அழிப்பு, மிதமிஞ்சிய கரியமில வாயு வெளியேற்றம், கனிம - எரிபொருள் சுரண்டலுக்காக நிலத்தடியில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் போன்றவை பிரபஞ்சத்தின் உயிரினங்களுக்கு இத்தகைய கேடுகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கடல்வள பயன்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்றம் இதற்கொரு முக்கிய காரணமாக கூறப்பட்டிருக்கிறது.
பூமியில் இதற்கு முன்பும் பலமுறை உயிரினங்களின் அழிவு நிகழ்ந்துள்ளபோதிலும், அழிவுக்கு முற்றிலும் மனிதர்கள் காரணமாக இருப்பது இதுவே முதல்முறை.
 
இப்போது 10 லட்சம் உயிரினங்களை அழிவை நோக்கி தள்ளியிருக்கும் அபாயகரமான இந்நிலை தொடர்ந்தால், அடுத்த 150 ஆண்டுகளில் பூமியின் 75% உயிரினங்கள் முழுவதுமாக அழிந்து மனித இனத்தின் ஜீவிதத்துக்கும் நெருக்கடியை உண்டாக்கும் என்பது இதில் அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய எச்சரிக்கையாக உள்ளது. 
 
தாவரங்கள், பூச்சிகள், அரிய சின்னஞ்சிறு உயிரினங்கள் தற்போது அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் குறித்த உயிரினங்கள் முழுவதுமாக அழிந்துபோகும். இதன் நீட்சி, பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதைய செழுமையான உயிரினங்களுக்கும் அழிவை கொடுக்கும் என்பது நம்முன் இருக்கும் பேராபத்தாக பார்க்கப்படுகிறது.
 
உயிரினங்களுக்கு அழிவை தரும் நிலையை அபாயகரமான தொழிற்முறைகள் மட்டும் உருவாக்கவில்லை. இயற்கை வளங்களை பொருளியல் சார்ந்த தேவைகளுக்காக உறிஞ்சுவதும்தான். கட்டற்ற தொழிற்முறை விவசாயம், மீன்பிடி போன்றவையும் உயிரினங்கள் அழிவுக்கு காரணமாக இருக்கிறது எனும் கசப்பான உண்மையையும் ஐநா வெளியிட்டிருக்கும் அறிக்கை சொல்கிறது. வாழ்தலுக்காக இயற்கையை அதன் இயல்பான போக்கில் அணுகாமல், பொருளியல் அறுவடைக்கான மூலதனமாக பாவித்ததால் நேர்ந்திருக்கும் விளைவையே நாம் எதிர்கொள்ளபோகிறோம். இப்போது வேறெதுவும் செய்வதற்கில்லை எனும் நிலையில், மனிதர்களோடு மீதமிருக்கும் உயிரினங்களை தற்காத்துக்கொள்ள சிறு மாற்றத்தையாவது நிகழ்த்த வேண்டுமெனும் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

English Summary
Danger behind the world

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...