???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்ட தலித் இளைஞருக்கு வெட்டு

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:21:20 IST

தேனி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் 23 வயதான சுந்தர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சாலை ஓரத்தில் உள்ள தனது வீட்டின் வாசலில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது, சுந்தர் வீட்டின் வழியாக தனது வீட்டுக்கு கோழிக்கடை நடத்தும் 40 வயதான கண்ணன், 19 வயதான தனது மகன் மனோஜ் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரை பார்த்ததும் கண்ணன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அதை கவனிக்காமல் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரை அழைத்து, தான் போகும்போது மரியாதை குறைவாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு எப்படி பாட்டு கேட்கலாம் எனக்கூறி போதையில் இருந்த கண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், கண்ணனின் மகன் மனோஜ்ஜூம் சுந்தரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றி கோழி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தர் தலையில் கண்ணன் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் கண்ணன் மற்றும் மனோஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். சுந்தரை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...