செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி நெகிழ்ச்சி!
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி நெகிழ்ச்சி!
Posted : திங்கட்கிழமை, அக்டோபர் 25 , 2021 13:21:38 IST
இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் இவ்விருதானது வழங்கப்படுகிறது. நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். அவருடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூர், அண்ணன் சத்யநாராயணாவுக்கு நன்றி. என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி. இந்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள்தான்” என்றார்.
|
|