???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  22:35:06 IST

தென்மேற்கு வங்கக் கடலில் 29-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரும் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த இரு நாட்களில் தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து, சென்னை - நாகை இடையே  29-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றார்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை உள்தமிழக மாவட்டங்களான ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி, திருவாரூர் மற்றும் தஞ்சையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...