அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத விலை உயர்வு!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  08:18:43 IST

அண்டை நாடான இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
 
இந்நிலையில், கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக இலங்கை அரசு அறிவித்தது. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலை தவிர்க்கும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதைத்தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 12.5 கிலோ எடையிலான சிலிண்டர் 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1,257 ரூபாய் உயர்ந்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
இதேபோல் ஒரு கிலோ பால் பவுடர் 250 ரூபாய்க்கு விற்பக்கப்படுகிறது. கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் விலை 10 % உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
 அமெரிக்கா டாலர் பற்றாக்குறையால் பால் பவுடரை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாதுறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...