???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   30 , 2020  06:19:10 IST


Andhimazhai Image

இனி அடிச்சா என்ன? அடிக்காட்டா என்ன?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரசிகர்கள் பலர் தற்போது முணுமுணுக்கும் டயலாக் இதுதான். ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் எதுவும் மாறப்போவதில்லை என்றாலும், ஆறுதலாக பெற்று வரும் இந்த வெற்றிகளை கலாய்த்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை முடிசூடா கிங்க்ஸ்-களாக வலம் வந்த சென்னை தன் மகுடத்தை கழற்றி வைத்துவிட்டு வெளியேறுகிறது. சூதாட்ட புகாரில் சிக்கி தடைவிதிக்கப்பட்ட 2016, 2017 ஆண்டுகளை தவிர, 10 ஐ.பி.எல் சீசனில் விளையாடியுள்ள சென்னை, அனைத்து சீசனிலுமே ப்ளே ஆஃப் சென்றுள்ளது. இந்த பெருமை வேற எந்த அணிக்கும் கிடையாது. அதேபோல், ஆடிய 10 சீசனில் 3 முறை கோப்பை வென்றும், 5 முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. அதாவது 8 சீசனில் ஃபைனல் போட்டியை விளையாடிய பெருமையும் சென்னை அணியையே சேரும்.

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னைக்கு எதிரான போட்டி என்றாலே எதிரணிக்கு ஒரு சிறு கலக்கம் இருக்கவே செய்யும். இத்தனை சிறப்பான அணி இந்த சீசனில் சறுக்கியது எப்படி?

சிஎஸ்கே-வின் இந்த தோல்விக்கு பல குரல்களில் ஒலித்த ஒரே புகார், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான். மேலும், முக்கிய வீரர்கள் சிலரை சரியாக சுழற்சி முறையில் பயன்படுத்தவில்லை என்ற கருத்தும் உள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அணியில் உள்ள வீரர்களின் சராசரி வயது 30-க்கும் மேல். அதிக வயது கொண்ட விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குவதாலேயே ’அங்கிள்ஸ் அணி’ என்று பலரும் கேலி செய்து வந்துள்ளனர்.

கேப்டன் தோனி முந்தைய தொடர்களை போலவே, இந்த தொடரிலும் 18 வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்துள்ளார். ஆனால், வெற்றியை பெற்றுத் தரும் சரியான அணி சென்னைக்கு இம்முறை செட் ஆகவில்லை.

’இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை’ என்று தோனி சொன்னபோது அது விமர்சிக்கப்பட்டாலும், அணியில் இடம் பெற்ற சில இளம் வீரர்கள் தொடக்க போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

4 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ், கடைசி இரண்டு போட்டிகளில் தான் நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனால், ஆரம்பம் முதலே சொதப்பிய ஜாதவுக்கு 8 வாய்ப்புகளை வழங்கியது தான் தோனிக்கு எதிரான விமர்சனங்களை எழுப்பியது.

ஒரு காலத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட சென்னைக்கு வெற்றியை பெற்று தந்த வாட்சன், வயது மூப்பின் காரணமாக ஒன்றோ, இரண்டோ போட்டியில் மட்டுமே ஃபார்முக்கு வருகிறார். சென்னை அணிக்கு தூணாக இருந்த ரெய்னா இந்த சீசனில் பங்கேற்காதது, காயம் காரணமாக விலகிய ப்ராவோ, மூத்த வீரர்களால் அமீரகத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றார்போல் திறம்பட செயல்பட முடியாதது என அனைத்துமே சென்னை அணியின் சரிவில் இம்முறை பிரதிபலித்தது.

அதிரடியாக விளையாட வேண்டிய சூழலில், தோனி 7-வது வரிசையில் இறங்கி விளையாடியது விமர்சிக்கப்பட்டதுடன், அவரது பேட்டிங்கும் இந்த சீசனில் திருப்திகராமக இல்லை.

2010-ஆம் ஆண்டு சென்னை அணி 7 போட்டிகளில் தோற்றதே அந்த அணியின் மோசமான விளையாட்டாக பார்க்கப்பட்டு வந்தது.  தற்போது, அதையும் விட மோசமாக நடப்பு தொடரில் 13 போட்டிகளில் 8 தோல்விகளை தழுவி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றிகளுக்காக விளையாடி வருகிறது.

இனி இருக்கும் ஒரு போட்டியில் எத்தனை அபாரமான வெற்றியை பெற்றாலும் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது இழந்ததுதான்.  இனி அடிச்சா என்ன? அடிக்காட்டா என்ன? என்று பல  மீம்களை உருவாக்கி சென்னை சூப்பர் கிங்ஸை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...