அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  20:23:06 IST

இனவெறிக்கு எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்காத டி காக் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான தங்களுடைய குரலை தெரிவித்து வருகிறது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் இன்றைய போட்டிக்கு முன்பாக அனைத்து வீரர்களும் இதேபோல் மண்டியிட்டு பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அறிவிப்பை தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக் ஏற்க மறுத்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போட்டிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அவர் விலகியது தொடர்பாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இன்றைய போட்டிக்கு முன்பாக அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரி மண்டியிட்டு இனவெறி தாக்குதலுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த டிகாக் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் எப்போதும் வீரர்களின் தனிப்பட்ட கருத்தை மதிக்கும். ஆனால் இனவெறி தாக்குதலுக்கு எதிராக மொத்த அணியும் ஒற்றுமையாக இருந்து ஒரே குரலில் செயல்பட வேண்டும். தற்போது அதை டிகாக் செய்யவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் எப்போதும் இனவெறி தாக்குதலை ஏற்றுக் கொள்ளாது. அதில் அனைத்து வீரர்களும் உறுதியாக இருக்க வேண்டும் " எனக் கூறியுள்ளது.

இந்தச் சூழலில் டிகாக் விலகியது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர்கள்  ஆதரவு தெரிவித்து மண்டியிட்டும், கையை தூக்கியும் இருந்தனர். ஆனால் அப்போது டிகாக் மட்டும் எதுவும் செய்யாமல் இருந்தார். தற்போது பலரும் அந்தப் படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...