???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை!- மருத்துவமனை 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகிழ்ச்சி விற்பன்னர்: கொலிண்டா க்ராபர் கிட்ரோவிச்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   13 , 2018  08:14:40 IST


Andhimazhai Image

லகக் கோப்பை கால்பந்தாட்ட அரை இறுதிப்போட்டியில் குரோஷிய கால்பந்து அணி இங்கிலாந்தை களத்தில் வெல்ல போராடிக்கொண்டிருந்த போது உலகெங்கிலும் அந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவர் மனதை கொள்ளைகொண்டார் அழகும் வசீகரமும் நிரம்பிய கொலிண்டா க்ராபர் கிட்ரோவிச். யார் இவர் என்று புருவம் உயர்த்த வேண்டாம். ஐம்பது வயதாகும் கொலிண்டா குரோஷிய நாட்டின் நான்காவது அதிபர். நாட்டின் முதல் பெண் அதிபர். அதிபராக பதவியேற்ற போது இவருக்கு வயது 46. மிகக் குறைந்த வயதில் அதிபராகப் பதவியேற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1993-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவியேற்கும் நாளது வரை ஏறத்தாழ 23 வருடங்கள் வலதுசாரி அமைப்பான குரோஷிய ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர்.

 

ஸாக்ரெப் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் [சர்வதேச விவகாரங்கள்] முதுகலைப் பட்டம் பெற்ற கொலிண்டா அரசியலில் நிரம்ப அனுபவம் மிக்கவர். அதிபராக ஆவதற்கு முன் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், குரோஷியாவுக்கான அமெரிக்க தூதராகவும், நேட்டொ அமைப்பின் துணை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

 

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணி நாக் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் ரஷ்யாவுக்கு ரசிகர்களுடன் விமானம் ஏறினார் கொலிண்டா. நாக் அவுட் போட்டியில் டென்மார்க் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் பெனால்ட்டி ஷூட்டில் குரோஷியா வென்றது. காலிறுதிப்போட்டியில் ரஷியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோது, வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார் கொலிண்டா க்ராபர் கிட்ரோவிச்.

 

11.7.2018. புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை வீழ்த்தி கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை குரோஷியா வீரர்கள் மட்டுமல்ல, குரோஷியா நாடே கொண்டாடி வருகிறது. போட்டி முடிந்ததும் குரோஷியா அணியின் வெற்றியை, வீரர்களின் அறைக்குச் சென்று அவர்களுடன் சந்தோச மிகுதியில் ஆட்டம்போட்டார் அதிபர் கொலிண்டா. நாட்டின் பெண் அதிபர் ஒருவர் கால்பந்து வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

 

குரோஷியா யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஒரு குட்டி நாடு. தனிநாடாக பிரகனப்படுத்திக்கொண்ட பிறகு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் ஐம்பது லட்சம்தான். 1998-ஆம் ஆண்டில்தான் அந்த அணி உலக்கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முதலாகக் கலந்து கொண்டது. இது அந்த நாட்டைப்பற்றிய மிகச் சுருக்கமான முன்கதைச் சுருக்கம்.  

 

குரோஷிய அணி முதன்முதலாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன் அந்த அணி 1998 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அந்தப் போட்டியில் பிரான்ஸ் வீரர் லிலியன் துர்ரம் அடித்த இரண்டு கோல்களை அவ்வளவு எளிதில் குரோஷிய அணியின் வீரர்களும் கால்பந்து ரசிகர்களும் மறந்துவிட முடியாது. இருபது வருடங்களுக்குப் பின் அதே அளவுக்குப் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது குரோஷியா. கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடிக்குமா குரோஷியா? திங்கள் கிழமை காலையில் இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.    

 

 

- சரோ லாமாclick here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...