அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தென்காசி தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   22 , 2022  10:56:45 IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு விதித்து திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் சாதிய தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திர மூர்த்தி, குமார் மகேஷ்வரன் ஆகிய  குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் முருகன், சுதா ஆகிய  இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்பநாபன் குற்றவாளிகள் 5 பேருக்கு 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...