அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கிறுக்கு உலகம்: 37 வது திருமணம், 28 மனைவிகள், அசரவைக்கும் முதியவர்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   10 , 2021  15:20:02 IST


Andhimazhai Image

மன்னர்கள் தான் டஜன் கணக்கான ராணிகளை திருமணம் செய்துகொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், ஆனால், சமீபத்தில் முதியவர் ஒருவர் தனது 37வது திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் தனது 37வது திருமணத்தை செய்துகொண்டுள்ளார். இந்த திருமண வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  “தைரியமான மனிதர், 37வது திருமணம், 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்” என பதிவிட்டுள்ளார். இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த திருமணத்திற்கு இந்த வீடியோவை தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, தைவானில் நடந்தது இன்னொரு கூத்து. இங்குள்ள வங்கி ஊழியர் ஒருவர், ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்துள்ளார். இது 37 நாட்களுக்குள் நடந்தேறியுள்ளது. தைவானில் திருமணத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைப்பதால் இது போன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி இவர் முதல் முறையாகத் திருமணம் செய்து கொள்ள வங்கியில் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். வங்கியும் அவருடைய திருமணத்திற்கு 8 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. விடுப்பு நாட்கள் முடிந்ததும் பணிக்குத் திரும்பாமல் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மறுநாள் அவரையே மீண்டும் திருமணம் செய்துள்ளார். இதற்காக தன்னுடைய வங்கியில் மீண்டும் விடுப்புக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவர் தன்னுடைய நான்கு திருமணங்களுக்கும் சேர்த்து 32 நாட்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார். இதை அறிந்த வங்கி நிர்வாகம் கூடுதல் ஊதிய விடுப்புகளை வழங்க மறுத்துள்ளது. இதையடுத்து அவர் தன்னுடைய வங்கிக்கு எதிராக தொழிலாளர் பணியகத்தில் புகார் அளித்துள்ளார். தைபே நகரத் தொழிலாளர் பணியகம் இந்த விவகாரத்தை விசாரித்து, வங்கி நிர்வாகம், தொழிலாளர் சட்டத்தை மீறுவதாக தீர்ப்பளித்தது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கிக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.


கொடுமையா இருக்கேய்யா.. என்கிறீர்களா? கடைசியில் வங்கி மேலதிகாரிகள் இத்தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்து தாங்கள் செய்தது தான் சரி என்று உத்தரவு வாங்கி வருவதற்குள் நாய் பாடு பட்டுவிட்டார்கள்!

இத்தோடு இன்னொரு செய்தியையும் படியுங்கோள்!

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 67 வயதான முன்னாள் போர் வீரர் ஒருவர் 100 பெண்களை மணந்துகொள்ளப்போவதாக சூளுரைத்துள்ளார். இப்போது  அவருக்கு 17 மனைவிகள் உள்ளனர். 151 குழந்தைகள். மனைவிகளை திருப்திப்படுத்துவதே தன் முழுநேர வேலை என்றும் அவர் கூறி இருக்கிறார்.

ஒரு மனைவிக்கே டங்குவார் கிழிகிறது என்கிறவர்கள் இந்த செய்தியைப் படித்தவுடன் மறந்துவிடவும்!

-தா.பிரகாஷ்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...