???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய கட்சி அந்தஸ்த்தை பறிகொடுத்த இடதுசாரிகள்!

Posted : சனிக்கிழமை,   மே   25 , 2019  01:36:16 IST


Andhimazhai Image
 
 
2019 மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் தேசிய கட்சி அந்தஸ்த்தை பறிகொடுத்துள்ளன.
 
வரலாற்று தோல்வி:
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004 நடைபெற்ற தேர்தலில் 43 தொகுதிகளிலும், 2009-இல் 16 தொகுதிகளிலும், 2014-இல் 9 தொகுதிகளுலும் இந்த  கட்சி வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடத்தில்கூட இந்த கட்சி வெற்றியடையவில்லை.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்சி சார்பாக அதிக எதிர்பார்ப்புடன், பீகார்-பெகுசாராய் தொகுதியில் போட்டியிட்ட  மாணவர் தலைவர் கன்னையா குமார் தோல்வியடைந்தார்.
 
மேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை வேட்பாளர்களும் கட்டுத்தொகையினை பறிகொடுத்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
 
தேசிய கட்சி அந்தஸ்த்து பறிபோனது:
 
ஒரு கட்சி தேசிய அந்தஸ்த்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
1)    நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்
 
2)    4 மாநிலத்திலிருந்து 4 இடங்களில் வெற்றிபெற்று குறைந்தது 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.
 
3)    நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 %  ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.
 
இந்த அடிப்படைகளை பூர்த்தி செய்யாததால் இடதுசாரிகள் தேசிய அந்தஸ்த்தை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...