???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எய்ட்ஸ் தடுப்பூசி கண்டு பிடிக்கறப்ப கொரோனா வந்துச்சா? என்னடா சொல்றீங்க?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   19 , 2020  21:13:39 IST


Andhimazhai Image
 
சீனாவில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ் என விசாரணை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  பல வதந்திகள் இது பற்றி உருவாகி வருகின்றன. இந்நிலையில் சீனா இச்செய்திகளை கடுமையாக மறுத்துவருகிறது.
 
ஆனால் முதல்முறையாக ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் யூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. எய்ட்ஸ் தடுப்பூசி தயாரிக்கும்போது விபத்தாக இந்த வைரஸ் உருவாகி உள்ளது என்று அவர் கூறி உள்ளார். பேராசிரியர் மாண்டேக்னியர் என்ற இந்தவிஞ்ஞானி கொரோனா வைரஸீன் மரபுக்கூறுகளில் எய்ட்ஸ் வைரஸின் கூறுகள் காணப்படுவதாக ப்ரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“வூஹானில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஆய்வகம் கொரோனா வைரஸ்களில் 2000களில் இருந்து ஆய்வு செய்துவருகிறது. இதில் அவர்களுக்கு நல்ல அனுபவமும் திறனும் உண்டு.” என்று அவர் சொன்னதாக அந்த நிறுவனம் சொல்கிறது.
பேராசிரியர் மாண்டேக்னியர் எயிட்ஸ் வைரசைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது இங்கே அறியத்தக்கது.
 
, வூஹானில் உள்ள ஆய்வகத்தில் வௌவால்களில் ஆய்வு செய்த ஒரு ஆய்வாளருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டு பிறகு அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவியது என ஏற்கெனவே அமெரிக்காவில் பாக்ஸ் நியூஸ் சானல் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் ப்ரெஞ்சு விஞ்ஞானி மாண்டேக்னியர் சமீபகாலமாக நிறைய உளறி வருகிறார். அவர் சொல்வதைப் பொருட்படுத்தவேண்டாம் என சக விஞ்ஞானிகள் சிலரும் சொல்லி இருக்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...