???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முழு ஊரடங்கை மேலும் தொடரவேண்டியது இல்லை! சில தளர்வுகள் செய்யலாம்!- பேரா.ஆர்.எம். பிச்சப்பன்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   09 , 2020  06:37:26 IST


Andhimazhai Image
 
 
 
இன்னும் இரண்டுமாதங்களில் மக்களிடையே கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புசக்தி( Herd Immunity) எந்த அளவுக்கு உருவாகி இருக்கிறது என்பது தெரியவரும். இப்போதைய நிலையில் முழு ஊரடங்கு நிலையை அப்படியே தொடரவேண்டியதில்லை.  சில தளர்வுகள் செய்து  மக்களை படிப்படியாக இயங்க அனுமதிக்கலாம் என்று மதுரைகாமராஜர் பல்கலைக் கழக முன்னாள் நோய் எதிர்ப்பியல் துறை (Immunology) பேராசிரியர் ஆர்.எம். பிச்சப்பன் கூறி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
 
ஆதிகாலத்தில் இருந்தே வைரஸ் நோய் தாக்குதல்கள் மனிதகுலத்தைப் பாதித்துவருகின்றன. மக்களிடம் உருவாகும் குறிப்பிட்ட வைரசுக்கான நோய் எதிர்ப்புசக்தியே மனித இனத்தைக் காப்பாற்றிவருகிறது. அதாவது  “கிருமி தாக்குதல் உள்ள எல்லோருக்கும் நோய் வருவதில்லை’ என நோய் எதிர்ப்புத் துறை அறிவியலில் சொல்வார்கள். வைரஸ் உடலில் நுழைந்தாலும் நோயாக மாறுவதில்லை என்ற நிலை உருவாகும்.  இதைத்தான்  ஊரடங்கு போன்ற வழிகளைக் கடைபிடித்து உருவாக முயற்சி செய்கிறோம்.
 
கோவிட்-19 தாக்குதலால் இன்று அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகள் தவிக்கின்றன. இந்தியாவில் இதன் பரவல் மெதுவாக உள்ளது. காலநிலை, அல்லது பிசிஜி தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டிருப்பது இதன் காரணமாக இருக்கலாம். மூன்று வாரகாலம் நம் நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு, நம்மை நோயை எதிர்க்க மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டிருப்பவர்களைக் கண்டறிவது ஆகியவற்றை செய்வதற்கான அவகாசத்தை வழங்கி உள்ளது. ஆனால் எவ்வளவு நாளைக்கு இதைத் தொடரமுடியும்? நாட்டின் பொருளாதாரம், தனி மனிதனின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கவனிக்கவேண்டும்.
 
ஆகவே முழுமையான ஊரடங்கை மேலும் தொடர்வதைக் கைவிட்டு, குறிப்பிட்ட, ஓரளவுக்கான கட்டுப்பாடுகளை இன்னும் ஒருமாதத்துக்கு தொடரலாம். இந்த கருத்து உலகில் இதுவரை தாக்கி உள்ள தொற்றுநோய்களின் வரலாற்றின் அடிப்படையிலானது.
 
இதற்கான என் பரிந்துரைகள்:
 
1)  இன்னும் ஒரு மாதத்துக்கு ஓரளவுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட ஊரடங்கு தொடரலாம். 
2) படிப்படியாக பேருந்து, ரயில், விமான சேவைகள் கொண்டுவரப்படலாம்.
3) முக்கிய, அத்தியாவசியமான வேலைகளுக்கு மட்டும் மக்கள் பயணிக்கலாம்.
 
4)பள்ளிகள், கல்லூரிகள் மூடி இருப்பதை இன்னும் 2 வாரங்களுக்குத் தொடரலாம். பின்னர் படிப்படியாக திறக்கலாம். 
 
5) முக்கிய தொழில்துறை பணிகளை உடனே தொடரலாம்.
 
6) தோட்டக்கலை, மீன்வளர்த்தல், கோழிக்குஞ்சு பொரிப்பகங்கள் போன்றவை தங்கள் பணிகளை உடனே தொடரலாம்.
 
7) இந்த தொழில்துறையினர் தங்கள் தொழிலாளர்கள் நலத்துக்குப் பொறுப்பேற்கவேண்டும். நோய்த்தொற்றை உடனே தெரியப்படுத்தவேண்டும். குழு காப்பீடு தரவேண்டும்.
 
8) உணவு தயாரிப்பு, மருந்து, விவசாயத்துறை பணிகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கவேண்டும்.
 
9) வேலை இல்லாதவர்கள், வயதானவர்கள் இன்னும் ஒரு மாதம் இல்லத்தில் இருக்கவேண்டும்.
 
10) பொது இடங்களில் மக்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணியவேண்டும்.
 
11) பேருந்துகள், ரயில்கள், பொதுஇடங்கள் தினமும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படவேண்டும்.
 
12) அனைத்து பொருளாதார செயல்பாடுகளும் அவர்கள் சொந்த அபாயப் பொறுப்பில் திரும்ப செயல்பட அனுமதிக்கலாம்.
 
13) மக்கள் தங்கள் பொறுப்பில் பொது, தனியார் மருத்துவர், மருத்துவமனைகளை நோய் அறிகுறி வந்தால் நாடவேண்டும்.
 
14) அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவேண்டும்.
 
15) மக்கள்தொகை நெருக்கமான நகரங்களில், இடங்களில் இலவசமாக பரிசோதனைகள் செய்து கண்காணிக்கவேண்டும்
 
16) தியேட்டர்கள், மால்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு  மூடப்படலாம்.
 
17) ஓட்டல்கள், உணவகங்கள் இன்னும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டு படிப்படியாக திறக்க  அனுமதிக்கலாம்
 
18)  அனைத்து மத விழாக்கள், கூடுகைகள் இரு மாதங்களுக்கு ரத்து செய்யப்படவேண்டும்
 
19) அனைத்து மத கோயில்கள், மத வணக்க இடங்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு மூடி
இ ருக்கவேண்டும். தேவைப்பட்டால் தொடரலாம்.
 
20) தொற்றால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவது, அவர்களுடன் தொடர்பாளர்களைக் கண்டறிவது, தனிமைப் படுத்துவது இன்னும் 2 மாதத்துக்குத்  தொடரவேண்டும்.
 
21) ஏற்றுமதி இறக்குமதிகள் அனுமதிக்கப்படலாம். பொருட்கள் இறங்குமிடத்தில் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தவேண்டும்.
 
22) அரசு அலுவலகங்கள் வேலை செய்யலாம்.
 
23) தனியார் அலுவலகங்களும் வேலை செய்யலாம். பணியாளர்கள் நலனுக்கு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
 
24) மத்திய ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள விஞ்ஞானிகள் அடையாளம் காணப்பட்டு, கொரானா பற்றிய ஆய்வைத் தொடர வழி செய்யவேண்டும். நோய்ப்பரவல் துறை நாட்டில்  மேலும் வலுப்படுத்தப்படவேண்டும்.
 
25) இன்னும் இருமாதங்கள் கழித்து இதே நேரம் மக்களிடையே மக்கள்திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) உருவாவது எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவரும்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...