???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புஷ்கர விழாவில் தாமிரபரணியில் நீராடலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   09 , 2018  18:44:37 IST

தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கலக்கக்கூடிய ஆறு தாமிரபரணி. தாமிரபரணி பொதிகை மலையில் தொடங்கி சமவெளி பகுதியில் பாபநாசம் முதல் புண்ணகாயல் வரையிலான 124 கி.மீ தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கிறது. இதில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில்தான் தாமிரபரணி மகாபுஷ்கரணி விழாவானது நடக்கும்.
 
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரமகலசம் 12 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் இருப்பதாகவும், இந்த விழாவின்போது தாமிரபரணி ஆற்றில் நீராடினால் பொதுமக்கள் நலம்பெறுவர் என்று கூறப்படுகிறது. இந்த புஷ்கரணி விழா இந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி மகாபுஷ்கர விழா தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது.
 
இதன் பொருட்டு, நெல்லையில் குறுக்குத் துறை மற்றும் தைப்பூச படித்துறையில் நீராட இந்து அறநிலையத்துறையும் நெல்லை மாவட்ட ஆட்சியரும் அனுமதி மறுத்து இருந்தனர். குறுகலான இடம் என்பதால் குறுக்குத்துறையில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், அனுமதி மறுப்புக்கு எதிராக தொடுத்த வழக்கில் நீராடலாம் என்று நிபந்தனையுடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஆற்றின் நீரோட்டத்தைப் பொறுத்து படித்துறையில் பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...