அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது 0 2020-ல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது, கொரோனா 2-ம் அலையால் இன்னும் மோசமாகும்: ஆய்வில் தகவல் 0 நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: ராகுல் காந்தி 0 புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு 0 ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைக்கும் ‘ஆக்ஸிஜன் மனிதன்’! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆதாரம் இல்லை: ரஜினிகாந்த் 0 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பழுதான சிசிடிவி கேமரா! 0 தடுப்பூசி விற்பனையில் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்கிறதா சீரம் நிறுவனம்? 0 இந்தியாவில் புதிய உச்சம்: 3 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம் 0 கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு 0 மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 0 ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! 0 சீன கப்பலை வெளியேற்றிய இலங்கை! 0 சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஹாங்காங் விவகாரத்தில் அணி திரளும் நாடுகள் : சீனா அதிருப்தி!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   20 , 2020  11:05:23 IST

ஹாங்காங் – சீனாவிற்கு இடையேயான பிரச்சனையில் ஹாங்காங் நாட்டிற்கு ஆதரவாக உலக நாடுகள் அணி திரண்டுள்ளன.
 
இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்த வந்த  ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று, சீன நாட்டின் ஒரு பிராந்தியமாக அதேசமயம் தன்னாட்சியுடன் செயல்பட்டு வந்தது.  இந்நிலையில், சமீபத்தில் ஹாங்காங்கின் தன்னாட்சி சுதந்திரத்தை பறிக்கும் வகையில் சீனா தேசிய பாதுகாப்புச் சட்டதை கொண்டு வந்தது. இதற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஹாங்காங்கில் பல போராட்டங்களும், ஒடுக்குமுறைகளும் நடந்தேறின. இதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.
 
சீன அரசின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீன சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென சீன அரசிடம் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை, வளம் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஹாங்காங் விவகாரத்தில் உலக நாடுகளின் தலையீட்டால் சீனா தற்போது அதிருப்தியில் உள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...