???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரு கொரானா சூரிய அஸ்தமனம்!

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   09 , 2020  04:41:12 IST


Andhimazhai Image
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவருக்கு இளம் மருத்துவர் ஒருவர் சூரிய அஸ்தமனத்தை காண்பித்த புகைப்படம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரானா வைரஸின் தாக்கம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
 
இந்த துயரமான சூழலில் சீனாவின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவை ஈடுஇணையற்றதாக இருக்கிறது. 
 
அதனொரு பகுதியாக கொரானாவால் பாதிக்கப்பட்டு ஊஹாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 87 வயது முதியவரின் உணர்வுபூர்வமான ஆசையை தன்னுடைய இருபதுகளில் இருக்கும் இளம் மருத்துவர் ஒருவர் நிறைவேற்றியிருக்கிறார்.
 
வயது முதிர்ந்த நேரத்தில் கொரானா தாக்கத்தில் சிக்கிய அந்த முதியவருக்கு, சிடி ஸ்கேன் செய்ய அழைத்து செல்லும்போது சூரிய அஸ்தமனம் நிகழும் ரம்மியத்தை காண வேண்டுமென்கிற ஏக்கம் எழுந்திருக்கிறது. இதனை புரிந்துகொண்ட அந்த மருத்துவர் படுக்கையுடன் அந்த முதியவரை வெளியே கொண்டுவந்து சூரிய அஸ்தமனத்தை காண செய்திருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணம் பதியப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில்பலரால் பகிரப்பட்டது. உணர்ச்சி பொங்கும் அந்த தருணம் குறித்து பலரும் நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
 
கொரானாவின் கொடூரம் ஒருபுறம் உலகை உலுக்கிக்கொண்டிருந்தாலும் மனிதம் தழைக்கும் இப்படியான தருணங்கள் நம்பிக்கையை விதைக்கின்றன.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...