???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது: உலக சுகாதார அமைப்பு

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   26 , 2020  01:04:59 IST

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்,

‘கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. ஊரடங்கு மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பது சுகாதாரத்துறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும். எனினும், கொரோனாவை ஒழிக்க இது உதவாது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தை கொரோனாவை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். 2-வது வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ள இந்த நேரத்தில், இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது.  

கடுமையான  நடவடிக்கைகள்,சோதனைகள் ஆகியவை தொற்றைக் கண்டறிய சிறந்த வழியாக மட்டுமல்லாமல்  தொற்றைத் தடுக்கவும் சிறந்த வழியாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்குத் தொற்று பரவியது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை” என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...