செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 15 , 2021 23:03:06 IST
தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை செல்லும் வழியில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து நாளை முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 3 ஆயிரம் மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும்.
முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது' என கூறினார்.
|