???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   02 , 2020  23:17:58 IST

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று 1,036 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 55 பேர் என ஒரே நாளில் மொத்தம் 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 644 ஆண்கள் மற்றும் 447 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 ஆயிரத்து 394 ஆண்களும், 9 ஆயிரத்து 179 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 13 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 536 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 7 ஆயிரத்து 176 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...