அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீதிமன்றப் படியேறிய பின்னரே தீர்வு - 800 மனநோயாளிகளுக்கு ஒரு வாரத்தில் கொரோனா சோதனை!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   16 , 2020  13:56:22 IST


Andhimazhai Imageகீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் உள்ள அனைத்து நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கும் ஒரு வாரத்தில் கொரோனா சோதனை செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல அரசு மனநலக் காப்பகத்தில் தங்கியுள்ள நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாற்பது பேருக்கும் மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படாமல் உள்ளதாக பிரச்னை எழுந்தது. சிலரை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் வெளியானதும் அவர்களின் வார்டு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மற்ற வார்டுகளில் மாநகராட்சியினர் சோதனையை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் சங்கம் இதில் தலையிட்டது. பிரச்னை குறித்து சங்கத்தின் பொதுச்செயலர் நம்புராஜன் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

மனுவில், “ கீழ்ப்பாக்கம், அரசு மனநலக் காப்பகத்தில் ஜூலை முதல் வாரம் ஐந்து நோயாளிகளும் மருத்துவமனையின் இயக்குநரும் கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, ஒரு சமையலர், 2 உடனாளர்கள், 3 பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 9ஆம் வார்டில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டதால் அங்கிருந்த அனைவருக்கும் தொற்று சோதனை செய்யப்பட்டதில் 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்கு குணகுறிகள் இல்லையென அரசு மனநல மருத்துவமனையின் புறநோயாளிகள் வளாகத்தில் இருக்கும் 19ஆவது வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்குள்ள அனைத்து நோயாளிகளும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். குறிப்பாக 30% பேர் மூத்த குடிமக்களாகவும் பாதிக்கும் மேற்பட்டோர் சர்க்கரை, மிகைஇரத்த அழுத்தம் போன்ற கூடுதல் நலிவுடனும் உள்ளவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்களால் தங்களின் நோய்த்தன்மையை வெளிப்படுத்தமுடியாதவர்கள். இந்த நிலைமை குறித்து கடந்த 8ஆம் தேதி சுகாதாரத் துறைச் செயலருக்கு மனு அனுப்பினோம். ஆனால் குணகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சோதனைசெய்யக் கூறியுள்ளதாகவும் அதன்படி இவர்கள் அனைவருக்கும் சோதனைசெய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அதையடுத்து 9-ம் தேதி மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்தோம். ஒருவரின் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்தநிலையில் அங்கிருந்து அரசு மனநலக் காப்பகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டார்; ஆனால் அத்தகையை நிலைமைக்கு சிகிச்சைதரக்கூடிய வசதி காப்பகத்தில் இல்லை. இதனால் 10ஆம் தேதி மீண்டும் அவரை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். எனவே, அனைத்து நோயாளிகள், மருத்துவர்கள், மாணவர்கள், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராஜீவ்காந்தி மருத்துவமனையிலோ கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிங் மருத்துவமனையிலோ தனியாக சிகிச்சை அளிக்க ஆணையிடவேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசு, ஏமாவதி ஆகியோர் அமர்வு, ஒரு வாரத்துக்குள் வளாகத்தில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவர்கள், மாணவர்கள், பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யவேண்டும் என உத்தரவிட்டது.


அத்துடன் ,”பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இலேசான, மிதமான, தீவிரமான குணகுறிகளுக்கு ஏற்ப மருத்துவ வசதியை அளிக்கவேண்டும்; தங்களுக்கு உள்ள நோய்த்தன்மையை அவர்களால் வெளிப்படுத்த முடியாதபோது மற்ற நோயாளிகளைப் போல மனநோயாளர்களை எடுத்துக்கொள்ள முடியாது எனச் சொல்லி,  அரசுத் தரப்பின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.” என்று நம்புராஜனுக்காக வாதாடிய வழக்குரைஞர் காரல்மார்க்ஸ் அந்திமழைக்குத் தெரிவித்தார்.  


 

-இர.இரா.தமிழ்க்கனல்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...