???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   29 , 2020  00:47:49 IST

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவதற்காக மனநல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் மாவட்டங்களான சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 13 மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொற்றுத் நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் வரையறுக்கப்பட்டது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒவ்வொரு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் உள்ள 8 கிலோ மீட்டர் தொலைவு வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வகையில் வீடு வீடாக சென்று நோய்த் தொற்று கண்டறியும் பணி மேற்கொள்வர்.

4 பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வார். இக்குழுவினர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து, அந்த நபர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வயதானவர்களின் விவரங்களையும் சேகரிப்பர்.

மேலும், நோய்த் தொற்று அதிகமாக ஏற்படக்கூடும் என கருதப்படும் பிரிவினர் மீது தனி கவனம் செலுத்தப்படும். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...