???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா

Posted : வியாழக்கிழமை,   மே   28 , 2020  21:28:17 IST

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1,65,386 கொரோனா பாதிப்புகள் உள்ளன. சீனாவின் 84,106 பாதிப்புகளை விட இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் ஆன்லைன் நிகழ்நேர புள்ளிவிவரம் காட்டுகிறது. சீனாவில் இறப்புகள் வியாழக்கிழமை இரவு 4,638 ஆக இருந்த நிலையில், இந்தியாவும் 4,711 இறப்புகளுடன் சீனாவை விஞ்சியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் அடிப்படையில், அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் அதிகமான பேர்  பாதிக்கப்பட்டு உள்ளனர், அதே நேரத்தில் இந்தியாவைவிட அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. துருக்கி இப்போது 10-வது இடத்தில் உள்ளது. ஈரான், பெரு மற்றும் கனடா முறையே 11, 12, 13​​ இடங்களில் உள்ளன சீனா 14-வது இடத்திலும் உள்ளது.

1 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், பெல்ஜியம், மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் ஈரான் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. கனடா மற்றும் நெதர்லாந்திற்கு முறையே 11 மற்றும் 12 வது இடங்கள். அடுத்தபடியாக இந்தியா 13 வது இடத்தில் உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...