அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்நாட்டில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா: இன்று ஒரே நாளில் 64 பேருக்கு பாதிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   19 , 2023  12:40:18 IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 304 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இவர்களில் ஆண்கள் 48 பேர், பெண்கள் 16 பேர் ஆவர். சிகிச்சை குணம் அடைந்து  39 பேர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இன்றைய நிலவரப்படி மொத்தம் 329 பேர் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று வரை மொத்தம் 35 லட்சத்து 95 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை உயிரிந்தோரின் எண்ணிக்கை 38,050. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதேபோன்று தேசிய அளவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 843 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 800ஐ தாண்டியது இதுவே முதல் முறை. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,389. என்று கூறப்பட்டுள்ளது.  கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோவிட் பாதிப்பு வேகமாக உயரும் மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருந்தது. கோவிட்-19-ன் உருமாறிய தொற்றுகளான XBB.1 மற்றும் XBB.1.16 ஆகியவை தீவிரமாக பரவுவதே இந்த திடீர் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நாட்டில் இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ICMR மற்றும் IMA அமைப்புகள் வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கையும் தெரிவித்திருந்தது.
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...