![]() |
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 14:33:58 IST
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள், இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, முகக் கவசம் அணிதல் கட்டாயம் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இருப்பினும் சில நாள்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
|
|