அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  20:52:38 IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. நேற்று 1,756 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று, 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 859 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது.


தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 181 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதே போல், கோவை மாவட்டத்தில், 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.


தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.


இன்று மட்டும் 2 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 434 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 21 ஆயிரத்து 207 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...