அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  18:46:11 IST

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில்    காத்திருக்கும்   போது,  ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும்  இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும்  கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...