???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   31 , 2020  23:28:42 IST

டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளை சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 57 பேர் பாதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடன் தெரிவித்த விவரங்கள்:

டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1,500 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்துக்கு வந்தவர்கள் 1,131 பேர். இவர்களில் 515 பேர் கடந்த 2 நாட்களில் தமிழக சுகாதாரத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநாட்டுக்கு சென்றவர்களில் 50 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்த்து. இவர்கள் இல்லாமல் 7 பேர் என மொத்தம் 57 பேர் ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரில், நெல்லையை சேர்ந்த 22 பேரும், நாமக்கலை சேர்ந்த 18 பேரும், கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேரும், விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரும், மதுரையை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்கள். இதுதவிர நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் மற்றொருவர் விமான நிலையத்தில் வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆகும்.

கொரோனா ஒரு புதிய நோய், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணி மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டப்பணி நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...