???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18-ஆக அதிகரிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   24 , 2020  23:10:40 IST

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுமார் 13,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 5 பேரும் முன்னதாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். அதில், ஒருவர் வெளிநாட்டு பயணம் செய்தவர் இல்லை. இன்று கொரோனா பாதித்தவர்கள் குறித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில், ‘நியூசிலாந்து தமிழகத்துக்கு திரும்பிய 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனிலிருந்து திரும்பிய 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய 52 வயது கொண்ட மற்றொருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய 25 வயது பெண் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...