செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்த மருத்துவர் ஷர்மிகா யூட்யூப்பில் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளத்தில்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Posted : புதன்கிழமை, ஜனவரி 25 , 2023 10:17:28 IST
மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்த மருத்துவர் ஷர்மிகா யூட்யூப்பில் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், 1 குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என பல்வேறு சர்ச்சை கருத்துகளை யூட்யூப்பில் தெரிவித்து வந்தார்.
இந்த வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது. இதனையடுத்து, சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. 15 நாட்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை அரும்பாகக்த்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் ஷர்மிகா ஆஜரானார். மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
|